;
Athirady Tamil News

ரஷ்யா நசுக்கப்படுவதை பார்க்க விரும்பவில்லை – நீடித்த போருக்கு தயார் நிலை !!

0

உக்ரைனில் ஏற்பட்ட தோல்வியால் ரஷ்யா நசுக்கப்படுவதை பார்க்க விரும்பவில்லை என பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரன் தெரிவித்துள்ளார்.

உக்ரைனுக்கான இராணுவ ஒத்துழைப்பை மேற்குலக நாடுகள் அதிகரிக்க வேண்டும் என வலியுறுத்திய பிரான்ஸ் அதிபர், நீடித்த போருக்கு தாம் தயாராக இருப்பதாக கூறியுள்ளார்.

உக்ரைனில் ரஷ்யா தோற்கடிக்கப்பட வேண்டும் எனவும் உக்ரைன் தனது நிலையை பாதுகாக்க வேண்டும் எனவும் பிரான்ஸ் அதிபர் குறிப்பிட்டுள்ளார்.

ரஷ்யாவை நசுக்கும் வரையில் போரை தாம் நீடிக்க விரும்புவதாக கூறுவோர் தொடர்பிலும் இமானுவேல் மக்ரன் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

மியூனிக் பாதுகாப்பு மாநாட்டில் உலகத் தலைவர்கள் ஒன்றுகூடியுள்ள நிலையில், அவரின் இந்தக் கருத்துக்கள் வெளிவந்துள்ளன.

இந்த மாநாட்டில் உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்குவதை விரைவுபடுத்துவதாகவும் ரஷ்யா மீது கடுமையான பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என்றும் வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன.

சிலர் நினைப்பது போன்று, ரஷ்யாவை அதன் சொந்த மண்ணில் தாக்கி, மொத்தமாக தோற்கடிக்க வேண்டும் என இமானுவேல் மக்ரன் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக மியூனிக் பாதுகாப்பு மாநாட்டில் உரையாற்றிய பிரான்ஸ் அதிபர், மொஸ்கோவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான நேரம் இதுவல்ல என்று வலியுறுத்தினார்.

உக்ரைனிய இராணுவ முயற்சிகள், நட்பு நாடுகளின் ஆதரவுடன், “ரஷ்யாவை மீண்டும் மேசைக்கு கொண்டு வந்து நீடித்த அமைதியைக் கட்டியெழுப்புவதே ஒரே வழி என்று பிரான்ஸ் அதிபர் சுட்டிக்காட்டினார்.

ரஷ்யாவில் ஆட்சி மாற்றத்திற்கான வாய்ப்பை நிராகரித்த இமானுவேல் மக்ரன், உலகம் முழுவதும் மேற்கொள்ளப்பட்ட இதேபோன்ற முயற்சிகள் முழுமையான தோல்வியில் முடிவடைந்தது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.