பிரித்தானியாவை விட்டு வெளியேறும் மற்றொரு இளவரசர் !!
பிரித்தானிய ராஜ அரண்மனையை விட்டு இளவரசர் ஆண்ட்ரூ வெளியேறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இளவரசர் ஹரி தன் மனைவியுடன் பிரித்தானிய ராஜ அரண்மனையைவிட்டும், பிரித்தானியாவை விட்டும் வெளியேறியதைப் போலவே, இவரின் வெளியேற்றமும் அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பருவம் எய்தாத அமெரிக்க இளம்பெண் ஒருவருடன் பாலுறவு கொண்டதால், ராஜ குடும்பத்துக்கு அவமானத்தைக் கொண்டுவந்ததாக அவர் மேல் குற்றச்சாட்டு இருக்கிறது.
மறைந்த மகாராணியார் அவர் மீது சில நடவடிக்கைகள் எடுத்தாலும், ஆண்ட்ரூவை குடும்பத்தைவிட்டு வெளியேற்றவில்லை.
ஆனால், மகாராணியார் மறைந்து இளவரசர் சார்ளஸ் மன்னரானதும், படிப்படியாக ஆண்ட்ரூவின் பொறுப்புகளைப் பறித்ததுடன், அவரை அரண்மனையிலிருந்தும் வெளியேற்றினார்.
இந்தநிலையில், ஆண்ட்ரூ பிரித்தானியாவிலிருந்து வெளியேறி அமெரிக்கா போன்ற ஏதாவது ஒரு நாட்டுக்கு செல்லக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், சமீபத்தில் ஆண்ட்ரூ பஹரைன் நாட்டுக்குச் சென்று அங்குள்ள ராஜ குடும்பத்தினரை சந்தித்துள்ளதாக பிரித்தானிய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.