;
Athirady Tamil News

சென்னை மாநகராட்சியில் 18 சாலைகள் குப்பையில்லா பகுதிகளாக பராமரிப்பு!!

0

சென்னை மாநகராட்சிக் குட்பட்ட பகுதிகளில் நாளொன்றுக்கு சராசரியாக 5,200 மெட்ரிக் டன் திடக் கழிவுகள் சேகரிக்கப்படு கிறது. சென்னை மாநகராட்சியின் சார்பில் தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க.நகர், அண்ணாநகர் மற்றும் அம்பத்தூர் மண்டலங்களுக்குட்பட்ட பகுதிகளிலும், உர்பேசர் மற்றும் சுமீத் நிறுவனத்தின் சார்பில் தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்தூர், அடையாறு, பெருங்குடி மற்றும் சோழிங்கநல்லூர் ஆகிய மண்டலங்களுக்குட்பட்ட பகுதிகளிலும், சென்னை என்விரோ நிறுவனத்தின் சார்பில் திருவொற்றியூர், மணலி, மாதவரம் மற்றும் அம்பத்தூர் மண்டலங்களுக்குட்பட்ட பகுதிகளிலும் தூய்மைப் பணிகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன. திடக்கழிவுகளை சாலை மற்றும் பொது இடங்களில் கொட்டுவது அல்லது தூக்கி எறிவதை தடுக்க மாநகராட்சியின் சார்பில் மேற்குறிப்பிட்ட பல்வேறு விதமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் திடக்கழிவு மேலாண்மையில் அடுத்தக் கட்ட நடவடிக்கையாக மாநகராட்சி சார்பில் குப்பையில்லா பகுதிகள் என்ற திட்டத்தின்கீழ் முதற் கட்டமாக 18 சாலைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அங்கு மாநகராட்சியின் சார்பில் குறிப்பிட்ட இடைவெளிகளில் சிறிய வகை குப்பைத் தொட்டிகள் அமைத்தல், சிறிய குப்பைத் தொட்டியுடன் கூடிய மிதி வண்டிகளில் தூய்மைப் பணியாளர்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு ஒருமுறை ரோந்து பணியில் ஈடுபடுதல், சாலைகளில் குப்பைகளை கொட்டும் நபர்களின் மீது அபராதம் விதித்தல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த 66 கி.மீ நீளமுடைய 18 சாலைகளில், 196 பேருந்து நிறுத்தங்கள் குப்பையில்லாமல் தூய்மையுடன் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த 18 சாலைகளை குப்பையில்லாமல் பராமரிக்க 270 தூய்மைப் பணியாளர்கள் காலை மற்றும் மாலை என இரு வேளைகளிலும் தூய் மைப்பணி மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், 222 குப்பைத் தொட்டிகள் அமைக்கப்பட்டு தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. 52 வாகனங்கள் மூலம் குப்பைகள் அகற்றப்பட்டு வருகின்றன. இந்நிலையில் குப்பையில்லா பகுதிகள் மேற் கொள்ளப்பட்ட கள ஆய்வில் சாலைகளில் குப்பைகளை கொட்டிய தனிநபர் மற்றும் நிறுவனங்களிடமிருந்து திடக்கழிவு மேலாண்மை விதிகளின்படி ரூ. 39,000 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.