அமெரிக்கா கூட்டுப்பயிற்சி – புவியீர்ப்பு ஏவுகணை சோதனைகளை அதிகரிக்கும் வடகொரியா!
வடகொரியா, அதன் கிழக்குக் கடற்கரையிலிருந்து 3 புவியீர்ப்பு ஏவுகணைகளை செலுத்தி சோதனை செய்துள்ளது.
ஜப்பானின் சிறப்புப் பொருளியல் எல்லைக்கு அப்பால் குறித்த ஏவுகணைகள் விழுந்ததாக ஜப்பானியக் கடற்படை தெரிவித்துள்ளது.
கடந்த மூன்று நாட்களில் 2 கண்டம் விட்டு கண்டம் பாயும் புவியீர்ப்பு ஏவுகணை சோதனைகளை வடகொரியா நடத்தியுள்ளது.
வடகொரிய அதிபரின் சகோதரி கிம் யோங் ஜோங் அமெரிக்காவுக்கு விடுத்த எச்சரிக்கையை தொடர்ந்து குறித்த புதிய ஏவுகணைச் சோதனை நடத்தப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் அதிகரிக்கும் இராணுவ கட்டமைப்பு மற்றும் கூட்டு இராணுவப்பயிற்சி தொடர்பில் வட கொரியா அவதானித்து வருவதாக அண்மையில் வட கொரியா அதிபர் கூறியிருந்தார்.
வடகொரியா பசிபிக் பெருங்கடலைப் பயன்படுத்தி சோதனைகளை மேற்கொள்வது அமெரிக்காவின் கையில் உள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நேற்று அமெரிக்காவுக்கும், தென் கொரியாவுக்கும் இடையிலான கூட்டு ராணுவப் பயிற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், ஜப்பானுடன் தற்போது பயிற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இந்தநிலையில், வடகொரியா தனது ஏவுகணை சோதனைகளை தீவிரப்படுத்தியுள்ளது.