கிராண்ட்பாஸ் மார்கஸ் லேனில் வர்த்தகரைக் கடத்திச் சென்று கப்பம் பெற்ற இரு வர்த்தகர்கள் அடங்கிய குழுவினர் கைது!
கொழும்பு, கிராண்ட்பாஸ் பொலிஸ் நிலைய இரகசிய பொலிஸ் என தம்மைக் கூறி வர்த்தகர் ஒருவரைக் கடத்திச் சென்று 70, 00,000 ரூபா கப்பம் பெற்ற சந்தேகத்தில் இரு வர்த்தகர்கள் அடங்கிய குழுவினரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கிராண்ட்பாஸ் மார்கஸ் லேனில் வைத்து குறித்த தொழிலதிபரை வேனில் கடத்திச் சென்றவர்கள் ஆரம்பத்தில் தாங்கள் சி.ஐ.டி.யைச் சேர்ந்தவர்கள் என்று கூறிய நிலையில் பின்னர் கடத்தப்பட்ட வர்த்தகரின் கை, கால்களை கட்டி சந்தேக நபரின் வீட்டுக்குச் சென்று இவர்கள் தடுத்து வைத்து கப்பம் பெற்றுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கப்பத் தொகையை பெற்றுக் கொண்ட குழுவினர் அவரை மீண்டும் வேனில் ஏற்றி, தெமட்டகொடை ரயில்வே குடியிருப்புக்கு அருகில் கொண்டு வந்து விட்டுச் சென்றுள்ளார்.
இந்நிலையில், இந்த தொழிலதிபருக்கு வலுக்கட்டாயமாக மதுபானம் கொடுக்கப்பட்டதால் அவர் போதையில் வீதியில் விழுந்தார்.
பின்னர் இவர் தான் எதிர்கொண்ட சம்பவம் தொடர்பில் கிராண்ட்பாஸ் பொலிஸில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.