ஈராக்கில் ஓவிய கண்காட்சி: துருக்கி, சிரியா நிலநடுக்கத்தின் கோர முகத்தை கண்முன் நிறுத்திய பெண் கலைஞர்கள்..!!
ஈராக்கில் நடைபெற்ற ஓவிய கண்காட்சியில் துருக்கி, சிரியா நாடுகளை உலுக்கிய நிலநடுக்கத்தின் துயர நிகழ்வுகள் படமாக வரையப்பட்டிருந்தன. ஈராக்கின் பாஸ்ரா நகரில் அல்காதர் என்ற கலைவிழாவையொட்டி ஓவிய கண்காட்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பெண் ஓவியர்கள் பலர், வரிசையாக அமர்ந்து நிலநடுக்கத்தின் கோர தாண்டவத்தை கற்பனை கலந்து வரைந்திருந்தார். சமீபத்தில் துருக்கி, சிரியா நாடுகளை தாக்கிய சக்தி வாய்ந்த நிலநடுக்கம் மக்களின் இதயத்தில் அழியாத வடுவாக உள்ளது.
பாதிக்கப்பட்டவர்களின் பரிதாப நிலையை வெளிச்சம் போட்டு காட்டிய ஓவியங்கள், நிவாரண நிதி வழங்க மக்களை ஊக்குவிக்கும் விதத்தில் இருந்தன. துருக்கி மற்றும் சிரியா நாடுகளில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை கூடிக்கொண்டே செல்கிறது. மேலும் பலரை காணவில்லை என உறவினர்கள் பரிதவித்து வருவதால் பலி எண்ணிக்கை உச்சம் தொடும் என அஞ்சப்படுகிறது.