சிவசங்கரிடம் மேலும் 4 நாட்கள் விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி!!
கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனின் முதன்மை செயலாளராக இருந்தவர் சிவசங்கர். ஐ.ஏ.எஸ். அதிகாரியான இவர் மீது தங்க கடத்தல் வழக்கில் தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டது. இந்த நிலையில் கேரளாவில் ஏழை மக்களுக்கு இலவச வீடு கட்டிக்கொடுக்கும் திட்டத்தில் லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்தது.
இது தொடர்பாக அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தினர். கடந்த 12-ந் தேதி முதல் அவரிடம் விசாரணை நடக்கிறது. அவரை மேலும் 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறை கோர்ட்டில் மனு செய்தது. இந்த மனுவை பரிசீலித்த கோர்ட்டு சிவசங்கரை மேலும் 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி வழங்கியது.