வடக்கு மக்களின் வளங்களை பிரபாகரனே அழித்தார் !!
வடக்கு மாகாண மக்களின் விவசாயம் உள்ளிட்ட வளங்களை அரசாங்கம் அழிக்கவில்லை என்றும் பிரபாகரனே அனைத்தையும் அழித்தொழித்தார் என்றும் நீதியமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ, வியாழக்கிழமை (23) தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இடம்பெற்ற அத்தியாவசிய சேவைகள் தொடர்பான ஜனாதிபதியின் கட்டளை மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே மேற்குறிப்பிட்ட விடயத்தை குறிப்பிட்டார்.
வடக்கு மாகாண விவாசயத்தை, வளங்களை அரசாங்கம் இல்லாதொழிக்கவில்லை என்றும் வடக்கு மாகாணத்தில் விவசாயத்துறையும், மக்களின் வாழ்க்கையும் அழித்தொழித்தார் என்றும் தெரிவித்த அவர், காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையைக்கூட பிரபாகரனே அழித்தார் என்று குறிப்பிட்டார்.
பிரபாகரனிக் நிர்வாகத்தினால் தான் வடக்கு மக்களின் வாழ்க்கை இல்லாதொழிக்கப்பட்டது. உண்மையை மறைத்து கடந்த இரு வருட காலத்தில் தான் வடக்கு மாகாண விவசாயம் இல்லாதொழிக்கப்பட்டது என்று குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது, ஸ்ரீதரன் எம்.பி. பொறுப்பானவர் என்ற வகையில் உண்மையாக செயற்பட வேண்டும்.
நான் இனவாதம் பேசவில்லை, நீங்கள் தான் இனவாதம் பேசுகிறார்கள். நீங்கள் 100 மணித்தியாலம் பேசினால் 100 மணித்தியாலமும் இனவாதம்தான் பேசுகின்றீர்கள் வடக்குக்குகு சென்று நல்லிணக்கத்தை ஸ்தாபிக்க நாம் முயற்சிக்கிறோம்.
நல்லிணக்கத்துக்கு வடக்கு மக்கள் முழு ஆதரவு வழங்குகிறார்கள் என்றும் இனவாத அரசியல்வாதிகள் தான் தடையாக செயற்படுகிறார்கள் என்றும் குறிப்பிட்ட அவர், எனினும் ஒரு சிலர் அதற்கு விதி விலக்காக உள்ளார்கள் என்றார்.