;
Athirady Tamil News

உயர் ரத்த அழுத்தம், கருத்தடை பிரச்னைகளால் ஒவ்வொரு 2 நிமிடத்திற்கும் ஒரு கர்ப்பிணிப் பெண் உயிரிழப்பு… ஐ.நா. அதிர்ச்சி தகவல்!!

0

ஒவ்வொரு 2 நிமிடத்திற்கும் ஒரு கர்ப்பிணிப் பெண் கர்ப்பக் காலத்திலோ, பிரசவத்தின் போதோ உயிரிழப்பதாக ஐநா அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் அவை பிரசவம் குறித்து அண்மையில் ஆய்வு மேற்கொண்டது. இந்த ஆய்வறிக்கையின் முடிவுகளின்படி, கடந்த 2020ம் ஆண்டு உலகம் முழுவதும் பிரசவத்தின்போது மட்டும் 2.87 லட்சம் பெண்கள் உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளது. 2016ம் ஆண்டு 3.09 லட்சம் பெண்கள் உயிரிழந்திருந்த நிலையில், 2020ம் ஆண்டு உயிரிழப்பு எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. மகப்பேறு தொடர்பான நோய்கள், அதீத ரத்தப் போக்கு, உயர் ரத்த அழுத்தம், கருத்தடை பிரச்னைகள் போன்ற காரணத்தால் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த அறிக்கையில், கடந்த 20 ஆண்டுகளில் பேறுகால இறப்பு விகிதம் மூன்றில் ஒரு பங்கு குறைந்திருப்பதாக தெரிவித்துள்ளது. இருப்பினும், கர்ப்ப காலத்தில், பிரவசத்தில் சிக்கல் ஏற்படும் போது ஒவ்வொரு இரண்டு நிமிடத்திற்கு ஒருவர் உயிரிழப்பதாக குறிப்பிட்டுள்ளது.கடந்த 20 ஆண்டுகளில் பேறுகால இறப்பு விகிதம் 34.3 சதவீதம் குறைந்துள்ளதாகவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அதாவது ஒரு லட்சம் பிரசவங்களில் 399 தாய்மார்கள் உயிரிழந்துள்ளதாகவும், இது 2020ம் ஆண்டில் ஒரு லட்சத்தில் 223 பெண்கள் உயிரிழந்துள்ளதாகவும் ஐ.நா.வின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2020ம் ஆண்டில் மட்டும், பிரசவ சிக்கல்கள் உள்ளிட்டவற்றால் ஒரு நாளைக்கு 800 பெண்கள் உயிரிழந்துள்ளார். வெணின்சுலா அதிக இறப்புகளையும், பெலாரஸ் குறைந்த விகிதத்தையும் பதிவு செய்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.