ஓராண்டு நிறைவு – போரில் உயிரிழந்த வீரர்களுக்கு அதிபர் ஜெலன்ஸ்கி அஞ்சலி!!
உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து ஒரு ஆண்டைக் கடந்துள்ளது. ஆனாலும் இந்த போர் இன்னும் முடிவுக்கு வந்த பாடில்லை. ரஷியா தொடர்ந்து தனது தாக்குதலை நடத்தி வருகிறது. அவர்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் உக்ரைன் வீரர்களும் ஆக்ரோஷத்தடன் போரிட்டு வருகின்றனர். இந்தப் போரை நிறுத்துமாறு உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. ஐ.நா. சபையிலும் ரஷியாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில், ரஷியா உடனான போரில் உயிரிழந்த உக்ரைனிய வீரர்களுக்கு அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி அஞ்சலி செலுத்தினார். புனித சோஃபியா சதுக்கத்தில் குழுமியிருந்த உக்ரைனிய ராணுவ வீரர்கள் மத்தியில் உரையாற்றிய அதிபர் ஜெலன்ஸ்கி, போராடும் உக்ரைனிய வீரர்களை வெகுவாக பாராட்டினார். மேலும் உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தினருக்கு விருதுகளை வழங்கி கவுரவித்தார்.