பூந்தொட்டிகளை காரில் வந்து திருடிய நபர்கள் – போலீசார் விசாரணை!!
அரியானா மாநிலம் குருகிராம் நகரில் ஜி20 மாநாடு தொடர்பான கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்திற்கு வெளிநாட்டு பிரதிநிதிகள் வருகை தர உள்ளனர். இதற்காக சாலைகளில் அலங்காரத்திற்காக பூந்தொட்டிகள் வைக்கப்பட்டு இருந்தன. இந்த பூந்தொட்டிகளை காரில் வந்த 2 நபர்கள் திருடி காரில் ஏற்றிச் சென்றுள்ளனர்.
இதனை சிலர் வீடியோ எடுத்து சமூகவலைத்தளங்களில் வெளியிட்டனர். சமூக வலைத்தளங்களில் வைரலான வீடியோ காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.