பெண்களுக்கு வாய்ப்பு அளிக்காத எந்த நாடும் வளர்ந்ததில்லை- கவர்னர் ஆர்.என்.ரவி!!
தமிழக பெண் ஆளுமைகள் பங்கேற்ற கூட்டம் சென்னையில் இன்று நடந்தது. இந்த கூட்டத்தில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பங்கேற்றார். கூட்டத்தில் கவர்னர் ஆர்.என்.ரவி பேசியதாவது:- பெண்களுக்கு தோழமையான சமுதாயமாக நமது சமுதாயம் எப்போதுமே இருந்ததில்லை. அனைத்து துறைகளிலும் பெண்களுக்கு வாய்ப்பு அளிக்காத, பெண்களை பின்னுக்கு தள்ளக்கூடிய எந்த ஒரு நாடும் வளர்ந்ததில்லை.
ஆங்கிலேயர் ஆட்சிக்கு முன்பு தமிழகத்தில் ஆண்களுக்கு இணையாக பெண்கள் கல்வி பயின்றனர். ஆங்கிலேயர் ஆட்சிக்கு பிறகு பெண்கள் கல்வி கற்க அனுமதி மறுக்கப்பட்டு வீட்டு வேலைக்கு பயன்படுத்தப்பட்டனர். இவ்வாறு அவர் பேசினார். கவர்னர் ஆர்.என்.ரவி பேசும்போது, பட்டங்கள் ஆள்வதும் என்ற பாரதியாரின் பாடலையும் பாடினார்.