தேர்தல் நடக்க வாய்ப்பில்லை | கைவிரிக்கும் கண்காணிப்பு அமைப்பு!!
எதிர்வரும் ஏப்ரல் மாதம் 25ம் திகதி உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்திருந்தாலும், அதற்கு வாய்ப்பு இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல்கள் கண்காணிப்பு அமைப்பான பெஃப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி இதனைத் தெரிவித்துள்ளார்.
தற்போது தேர்தல் தொடர்பாக ஜனநாயகத்தின் மூன்று தூண்களான நீதித்துறை, நிறைவேற்றுத்துறை மற்றும் சட்டவாக்கத்துறை ஆகியவற்றுக்கு இடையில் போட்டித்தன்மை ஏற்பட்டுள்ளது.
தேர்தலை நடத்தாமல் இருக்கும் திட்டத்திலேயே ஜனாதிபதி தொடர்ந்தும் செயற்;பட்டு வந்துள்ளார்.
தற்போது நீதிமன்றின் உத்தரவை இல்லாமல் செய்வதற்கு பாராளுமன்றம் தமது வரப்பிரசாதத்தை முன்னிலைப்படுத்துகிறது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.