;
Athirady Tamil News

உள்ளூராட்சி மன்றங்களில் பதவிக் காலம் இன்றுடன் நிறைவு!!

0

341 உள்ளூராட்சி மன்றங்களில் 340 உள்ளூராட்சி மன்றங்களின் உத்தியோகபூர்வ பதவிக்காலம் இன்று (19) நள்ளிரவுடன் நிறைவடைகிறது.

2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 20ஆம் திகதி முதல் நான்கு வருடங்களாக உள்ளூராட்சி மன்றங்கள் இயங்கி வந்த போதிலும், கடந்த வருடத்தின் நிலைமை காரணமாக, அதன் உத்தியோகபூர்வ பதவிக்காலம் ஒரு வருடத்திற்கு நீடிக்கப்பட்டது.

எவ்வாறாயினும் உள்ளுராட்சி சட்டத்தின் பிரகாரம் இன்றைக்கு முன்னதாக வாக்கெடுப்பு நடத்தி புதிய உறுப்பினர்களை நியமிக்க வேண்டும்.

ஆனால் இன்றைய திகதிக்கு முன்னதாக தேர்தலை நடத்த முடியாத காரணத்தால் இன்று நள்ளிரவுடன் உள்ளூராட்சி மன்றங்களில் அதிகாரம் நிறைவடைகிறது.

இதன்படி, 29 மாநகர சபைகளின் அதிகாரம் மாநகர ஆணையாளர்களுக்கும், 36 நகர சபைகள் மற்றும் 275 உள்ளூராட்சி சபைகளின் அதிகாரம் அந்த நிறுவனங்களின் செயலாளர்களுக்கும் மாற்றப்படும்.

தாமதமாக ஸ்தாபிக்கப்பட்ட எல்பிட்டிய உள்ளுராட்சி சபையின் பதவிக்காலம் மாத்திரமே தொடர்ந்து செயற்பாட்டில் உள்ளது.

இதேவேளை, உத்தியோகபூர்வ பதவிக்காலம் முடிவடைந்ததையடுத்து, அரசாங்கத்தினால் பயன்படுத்தப்படும் வாகனங்கள் உள்ளிட்ட அரச சொத்துக்களை ஒப்படைக்குமாறு அனைத்து உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.