தாய்லாந்து நாட்டின் நாடாளுமன்றம் கலைப்பு: மே 7ம் தேதி பொது தேர்தல்!!
தாய்லாந்தில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளதாக அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு வரும் மே மாதம் பொது தேர்தல் நடத்தப்பட உள்ளது.
தாய்லாந்தில் பிரதமர் பிரயுத் சான் ஒச்சா தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. கடந்த 2019ம் ஆண்டு ராணுவத்தின் ஆதரவுடன் இவர் மீண்டும் பிரதமரானார். இன்னும் சில நாட்களில், இவர் ஆட்சி அமைத்து 4 ஆண்டுகள் முடிவடைய உள்ளதால், தாய்லாந்தில் மீண்டும் பொது தேர்தல் நடைபெற உள்ளது.
இந்நிலையில், தாய்லாந்தில் நாடாளுமன்றத்தை கலைத்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இங்கு வரும் மே மாதம் 7ம் தேதி தேர்தலை நடத்த அரசு திட்டமிட்டுள்ளது. இதனிடையே, தற்போது எதிர்க்கட்சியாக இருக்கும் பியூ தாய் கட்சிக்கு கோடீஸ்வரரான தக்சின் ஷினவாத்ரா, ராணுவம் ஆதரவு தெரிவித்துள்ளது. எனவே, பியூ தாய் கட்சியின் சார்பில் பிரதமர் வேட்பாளராக தக்சின் ஷினவாத்ராவின் மகள் பிடோங்ட்ரான் ஷினவாத்ரா போட்டியிட உள்ளார்.