திருப்பதியில் ஆன்லைன் தரிசன டிக்கெட்டுகள் 3 நாட்கள் வெளியீடு!!
திருப்பதியில் ஏழுமலையானை தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் வசதிக்காக பல்வேறு சேவைகள் மற்றும் தரிசனங்களுக்கான ஆன்லைன் டிக்கெட்டுகள் ஓதுக்கீடு செய்யப்பட்டு திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டு வருகிறது. அதன்படி ஜூன் மாதத்திற்கான ஸ்ரீவாணி அறக்கட்டளை டிக்கெட்டுகள் தினமும் 1000 பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில் இன்று மாலை 3 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படுகிறது. கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம் மற்றும் சஹஸ்ரதிபாலங்கரா சேவைகளுக்கான டிக்கெட்டுகள் நாளை மறுநாள் காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படுகிறது.
அங்கப்பிரதட்சணம் டிக்கெட்டுகள் 24-ந் தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும். மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான ஏப்ரல் மாதத்திற்கான இலவச சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் 24-ந் தேதி மாலை 3 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளது. இதனை பக்தர்கள் பயன்படுத்தி தரிசன டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர். தொடர்ந்து 3 நாட்கள் ஆன்லைனில் தரிசன டிக்கெட்டுகள் வெளியிடப்படுவது பக்தர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.