அபுதாபியில் சாதனை பெண்களை கவுரவிக்கும் ‘புதுமை தமிழச்சி’ நிகழ்ச்சி: புதுச்சேரி பொதுப்பணித்துறை அமைச்சர் பங்கேற்பு!!
அபுதாபியில் சாதனை பெண்களை கவுரவிக்கும் ‘புதுமை தமிழச்சி’ நிகழ்ச்சியில் புதுச்சேரி பொதுப்பணித்துறை அமைச்சர் பங்கேற்றார். அபுதாபியில் உள்ள இந்திய சமூக மற்றும் கலாசார மையத்தில் சாதனை பெண்களை கவுரவிக்கும் புதுமை தமிழச்சி என்ற பெயரில் நிகழ்ச்சி நடைபெற்றது. சர்வதேச பெண்கள் தினத்தையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் பெண்களுக்கான பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து நடைபெற்ற கலை நிகழ்ச்சி மற்றும் பரிசளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக புதுச்சேரி மாநில பொதுப்பணித்துறை அமைச்சர் லக்ஷ்மி நாராயணன் கலந்துகொண்டார்.
நிகழ்ச்சியில் அமீரகத்தில் சாதனை படைத்த 18 பெண்களுக்கு புதுமை தமிழச்சி விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் இந்திய சமூக மற்றும் கலாசார மையத்தின் தலைவர் நடராஜன், அமீரக தமிழ் தொழில்முனைவோர் மற்றும் திறனாளர் கூட்டமைப்பின் தலைவர் டாக்டர் பால் பிரபாகர், நடிகை ரோமா அஸ்ரானி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை டேம் ஸ்கில் வளர்ச்சி மையத்தின் நிர்வாகி ஸ்ரீதேசி சிவானந்தம் மற்றும் குழுவினர் செய்திருந்தனர்.