ஐ போன்களை பயன்படுத்த தடை! வல்லரசு நாட்டின் அதிரடி உத்தரவு !!
எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதலாம் திகதிக்கு முன்னர் ரஷ்யாவில் அப்பில் நிறுவனத்தின் கையடக்க தொலைபேசிகளை (i phone) பயன்படுத்துவதை அரச அதிகாரிகள் கை விடுதல் வேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அடுத்த ஆண்டு ரஷ்யாவில் அதிபர் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில், அதிபர் நிர்வாக துறையிடம் இருந்து இத்தகைய அறிவிப்பு வெளியாகியுள்ளதாக தெரிய வருகின்றது.
மேலும், அரசு தொடர்பான விவகாரங்களாக இருப்பினும் Smart phone பயன்படுத்த கூடாது எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
Smart phone மற்றும் i phone பயன்படுத்தினால் அவற்றின் மூலம் மேற்கத்தைய நாடுகள் உளவு பார்க்கும் வாய்ப்புள்ளதால் அதற்கு பதிலாக இரகசியமாக வேறு ஏற்பாடுகளை ரஷ்ய அரசாங்கம் செய்துள்ளது.
இணைய சேவைகளை பயன்படுத்துவதில் அதிகமாக ஈடுபட்டு வரும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் (Vladimir Putin) Smart phone பயன்டுத்துவதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.