காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய கல்லூரி மாணவர் கைது!!
காஞ்சிபுரம் அருகே உள்ள புள்ளலூர் கிராமத்தை சேர்ந்த 14 வயது சிறுமி 9-ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த சில நாட்களாக மாணவியின் உடல் நிலையில் பாதிப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் வீட்டில் இருந்த மாணவிக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து மாணவியை பரிசோதனைக்காக அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு பெற்றோர் அழைத்து சென்றனர். டாக்டர்கள் பரிசோதித்தபோது மாணவி 3 மாத கர்ப்பமாக இருப்பது தெரிந்தது.
இதனை கேட்டு மாணவியின் பெற்றோர் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து காஞ்சிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இதுதொடர்பாக மாணவியிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது கோவிந்தவாடி அடுத்த அகரம் கிராமத்தைச் சேர்ந்த லோகநாதன் என்பவரிடம் மாணவி நெருங்கி பழகி வந்தது தெரிந்தது. லோகநாதன் காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
புள்ளலூர் கிராமத்துக்கு அடிக்கடி வந்து சென்றபோது மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டு உள்ளது. காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி அவர் மாணவியுடன் நெருங்கி பழகியது தெரிந்தது. இதையடுத்து மாணவியை கர்ப்பமாக்கிய கல்லூரி மாணவர் லோகநாதனை போலீசார் கைது செய்தனர். மாணவியின் கர்ப்பம் தொடர்பாக அடுத்தகட்ட முடிவு எடுக்க போலீசார் ஆலோசித்து வருகிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.