இன்றைய வானிலை தொடர்பான அறிவிப்பு!!
சப்ரகமுவ, மத்திய ஊவா, மற்றும் தெற்கு மாகாணங்களிலும் பொலநறுவை மாவட்டத்திலும் மழை பெய்வதற்கான சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
அத்துடன், மேற்குறிப்பிட்ட மாகாணங்கள் மற்றும் மாவட்டத்தில் மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நாட்டின் ஏனைய பகுதிகளிலும் அவ்வப்போது மழை பெய்வதற்கான சாத்தியம் உள்ளதாகவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.