இங்கிலாந்து பிரதமரிடம் இந்திய மாணவர்கள் மனு!!
கடந்த 2014ம் ஆண்டு பிபிசி பனோராமா விசாரணையில் விசாக்களுக்கு தேவைப்படும் கட்டாய மொழி தேர்வுக்காக இங்கிலாந்தின் இரண்டு தேர்வு மையங்களில் மோசடிகள் நடந்துள்ளதாக குறிப்பிடப்பட்டது. இதன் எதிரொலியாக அந்த மையங்களில் இணைக்கப்பட்டு இருந்த பல ஆயிரக்கணக்கான இந்திய மாணவர்கள் உட்பட சர்வதேச மாணவர்களின் விசாக்களை அரசு ரத்து செய்தது.
இந்நிலையில் இந்தியாவை சேர்ந்தவர்கள் உட்பட சர்வதேச மாணவர்கள் குழு தங்களது விசாக்கள் ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் ரிஷி சுனக்கிடம் நேற்று கோரிக்கை மனுவை வழங்கினார்கள்.