இரு ராஜபக்ஷர்களுக்கும் பயணத்தடை நீக்கம்!!
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ ஆகிய இருவருக்கும் விதிக்கப்பட்டிருந்த பயணத்தடை நீக்கப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
நிதி முறைகேடுகள் மற்றும் இலங்கைப் பொருளாதாரத்தின் முறைகேடுகள் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்களை ஆராய்ந்ததன் பின்னரே, மேற்படி உத்தரவை உயர் நீதிமன்றம் இன்று பிறப்பித்தது.