பாரிய விலைக் குறைப்புக்கு தயாராகும் அரசாங்கம்; அமைச்சர் ஹரின் தகவல்!!
எரிபொருள் விலையை பாரியளவில் குறைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக அமைச்சர் ஹரின் பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றில் உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மின்சார கட்டணம் அதிகம் என்பதை நாங்களும் ஏற்றுக்கொள்கிறோம்.
ஆனால் அடுத்த மாதம் எரிபொருள் விலையை பாரியளவில் குறைக்கவும், இந்த வருட இறுதியில் மின்சார கட்டணத்தை கணிசமாக குறைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று அவர் கூறியுள்ளார்.