லிஸ்டீரியா நோய் நாட்டில் பரவவில்லை!!
சுகாதார அமைச்சின் தொற்று நோய்ப் பிரிவினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் நாட்டில் இதுவரை லிஸ்டீரியா நோய் நிலைமை இனக்காணப்படவில்லை. எனவே இது குறித்து மக்கள் வீண் அச்சம் கொள்ளத் தேவையில்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதற்கமைய அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு நடத்திய சோதனைகளிலிருந்து பெறப்பட்ட தரவுகளின்படி, லிஸ்டீரியோசிஸ் தற்போது நாட்டில் இல்லை என்றும் தேவையற்ற அச்சம் தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, லிஸ்டீரியோசிஸ், பாக்டீரியாவால் ஏற்படும் நோய், நோயெதிர்ப்பு குறைபாடுள்ளவர்களுக்கு சிக்கல்களை ஏற்படுத்தும் என்று சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.
இன்று (22) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் சுகாதார அமைச்சின் தொற்றாநோய் பிரிவின் பிரதான தொற்றாநோய் நிபுணர் டொக்டர் சமித்த கினிகே, இலங்கையில் லிஸ்டீரியா நோய் இன்னும் பரவவில்லை என தெரிவித்தார்.
எவ்வாறாயினும், இந்த நோயிலிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்கு மக்கள் லிஸ்டீரியா குறித்து விழிப்புடன் இருப்பது அவசியம் என்றும் நிபுணர் குறிப்பிட்டார்.