தீவகப் பிரதேசங்களில் நடமாடும் மருத்துவ சேவையை முன்னெடுக்க ஏற்பாடு!!
யாழ் போதனா வைத்தியசாலை மருத்துவ குழாமினரால் தீவகப் பிரதேசங்களில் நடமாடும் மருத்துவ சேவையை முன்னெடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இதன் முதற்கட்டமாக நெடுந்தீவு பிரதேச வைத்தியசாலையில் எதிர்வரும் மார்ச் மாதம் 25ஆம் திகதி சனிக்கிழமை மருத்துவமுகாம் நடைபெறவுள்ளது.
இதில் யாழ் போதனா வைத்தியசாலையின் வைத்திய நிபுணர்கள், துறைசார் வைத்திய அதிகாரிகள் மற்றும் சம்பந்தப்பட்ட ஏனைய உத்தியோகத்தர்களும் கலந்துகொள்ளவுள்ளனர்.
இம் மருத்துவமுகாமில் கண்புரை சத்திரசிகிச்சை மேற்கொள்ள வேண்டியவர்களை இனங்காணும் பரிசோதனைகளும் இடம்பெறவுள்ளது.
எனவே நெடுந்தீவுப் பிரதேசத்தைச் சேர்ந்த பொதுமக்கள் மேற்படி மருத்துவமுகாமில் பங்குபற்றிப் பயன்பெறுமாறு யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ. கேதீஸ்வரன் தெரிவித்தார்.