ரூபாயின் பெறுமதி அதிகரிப்பு !!
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி புதன்கிழமை (22) அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட நாணய மாற்று விகிதங்களில் அடிப்படையில் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 312 ரூபாய் 61 சதமாகவும் விற்பனை விலை 330 ரூபாய் 16 சதமாகவும் பதிவாகியுள்ளது.
செவ்வாய்க்கிழமை (21) வெளியான நாணய மாற்று விகிதங்களின் படி, டொலரொன்றின் கொள்வனவு விலை 316 ரூபாய் 84 சதமாகவும் விற்பனை விலை 334 ரூபாய் 93 சதமாகவும் பதிவாகியுள்ளது.
மார்ச் 1ஆம் திகதிமுதல் அதிகரித்து வந்த ரூபாயின் பெறுமதி மார்ச் 10ஆம் திகதி முதல் குறைந்து வந்த நிலையில், சர்வதேச நாணய நிதியத்தின் அங்கிகாரம் கிடைத்த பின்னர் ரூபாயின் பெறுமதி அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.