;
Athirady Tamil News

கேரளாவில் குழந்தை பெற்ற நடிகையின் தாயார்: ‘குட்டி தங்கை கிடைத்தது மகிழ்ச்சி’என நடிகை கருத்து!!

0

கேரளாவில் டெலிவிஷன் சீரியல்களில் முன்னணி நடிகையாக இருப்பவர் ஆர்யா பார்வதி. இவருடைய தாயார் தீப்தி சங்கர். 47 வயதாகும் தீப்தி சங்கருக்கு சமீபத்தில் ஒரு பெண் குழந்தை பிறந்தது. இதுதொடர்பான செய்திகள் ஊடகங்களில் வெளியானது. அதை தொடர்ந்து நடிகை ஆர்யாவின் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மகள் நடிகையாக கலக்கி வரும் நிலையில், அவரது தாயாருக்கு குழந்தை பிறந்தது குறித்து பலரும் பல்வேறு கருத்துகளை தெரிவித்து இருந்தனர்.

ஆனால் நடிகை ஆர்யா பார்வதி எந்த பதிலையும் தெரிவிக்காமல் இருந்து வந்தார். இந்த நிலையில், நடிகை ஆர்யா பார்வதி, 8 மாத கர்ப்பிணியான தாயாரின் வயிற்றில் தலை சாய்ந்த நிலையில் எடுத்த புகைப்படத்துடன் சமூக வலைத்தளத்தில் செய்தி ஒன்றை பதிவு செய்து உள்ளார். அதில், ‘எனது தாயார் கர்ப்பமாக இருப்பது தெரியவந்ததும், அதனை என்னிடம் தெரிவிக்க எனது அப்பாவும், அம்மாவும் முதலில் தயங்கினார்கள். ஆனால் நீண்ட நாள் மறைக்க முடியாது என்பதால் அதனை தயக்கத்துடன் என்னிடம் தெரிவித்தனர். இந்த செய்தி முதலில் எனக்கு பேரதிர்ச்சியாகத்தான் இருந்தது.

பின்னர் யதார்த்த வாழ்வியலை புரிந்து கொண்டேன். இதற்காக வெட்கப்பட தேவையில்லை என்பதை உணர்ந்த நான் அப்போதே புதிய உறவை வரவேற்க தயாராகி விட்டேன். இப்போது எனது 23-வது வயதில் தங்கை கிடைத்து இருக்கிறாள். நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்’ என பதிவிட்டு உள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.