தமிழக விவசாயியான பாட்டியின் காலில் விழுந்து வணங்கிய பிரதமர் மோடி !!
தமிழ்நாட்டை சேர்ந்த முதுபெரும் இயற்கை விவசாயியான பாப்பம்மாள் பாட்டி காலில் பிரதமர் மோடி விழுந்து ஆசி பெற்ற சம்பவம் வைரலாகியுள்ளது.
தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் மாவட்டம் தேக்கம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பாப்பம்மாள். 107 வயதான பாப்பம்மாள் பாட்டி இன்று வரை தொடர்ந்து இரசாயன உரங்கள் இன்றி இயற்கை முறையிலேயே விவசாயம் செய்து வருகிறார்.
அவரது இந்த ஈடுபாட்டையும், சாதனையையும் பாரட்டி அவருக்கு இந்தியாவின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருதும் வழங்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது டெல்லியில் நடைபெற்ற சர்வதேச சிறுதானியங்கள் மாநாட்டில் பிரதமர் மோடி, கயானா, எத்தியோப்பியா நாட்டு அதிபர்களுடன் பாப்பம்மாள் பாட்டியும் கலந்து கொண்டார்.
இந்த மாநாட்டில் பாப்பம்மாள் பாட்டியை சந்தித்த பிரதமர் அவரது காலில் விழுந்து வணங்கி ஆசீர்வாதம் பெற்ற சம்பவம் வைரலாகியுள்ளது.
இதற்கு முன்னர் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மதுரை வந்தபோது மூதாட்டி சின்னப்பிள்ளை கால்களில் விழுந்து வணங்கிய சம்பவம் இதுபோல வைரலாக இருந்த நிலையில் மற்றொரு தமிழ்நாட்டு மூதாட்டி காலில் பிரதமர் விழுந்து வணங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.