மாணவர் ஒன்றியத்தின் கலந்துரையாடல் தோல்வி !!
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே உள்ளிட்ட மாணவர்கள் சிலர் நேற்று (22) பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு சென்றிருந்தனர்.
சப்ரகமுவ பல்கலைக்கழகத்திலுள்ள மாணவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் மாணவ செயற்பாட்டாளர்கள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு சென்றிருந்தனர்.
இதற்கமைய ஆணைக்குழுவின் உப தலைவருடன் இடம்பெற்ற கலந்துரையாடல் தீர்வின்றி முடிவடைந்துள்ளது.
இதேவேளை, நீர்த்தாரை பிரயோகத்திற்கான வாகனத்துடன், கலகத்தடுப்பு பொலிஸ் பிரிவினர் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு முன்பாக அழைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.