;
Athirady Tamil News

நெடுந்தீவில் 12 தமிழக கடற்தொழிலாளர்கள் கைது!!

0

யாழ்ப்பாணம் நெடுந்தீவு கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 12 தமிழக கடற்தொழிலாளர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் , அவர்களின் இரு படகுகளையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் பகுதியை சேர்ந்த 12 கடற்தொழிலாளர்களும் இன்றைய தினம் அதிகாலை நெடுந்தீவு கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்டிருந்த போது , கடற்படையினர் கைது செய்து அவர்களை மயிலிட்டி துறைமுகத்தில் தடுத்து வைத்துள்ளனர்.

மேலதிக சட்ட நடவடிக்கைக்காக 12 கடற்தொழிலாளர்களும் கடற்தொழில் நீரியல் வளத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டு , அவர்கள் ஊடாக ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.