;
Athirady Tamil News

தி.மு.க. அரசின் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம்- வரலட்சுமி மதுசூதனன் எம்.எல்.ஏ. பங்கேற்பு!!

0

காட்டாங்கொளத்தூர் வடக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் பிறந்த நாள் விழா, தி. மு.க. அரசின் இரண்டாம் ஆண்டு சாதனை மற்றும் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் ஊரப்பாக்கத்தில் ஒன்றிய செயலாளரும் , ஒன்றிய குழு துணை தலைவருமான வி.எஸ்.ஆராமுதன் தலைமையில் நடைபெற்றது. ஊரப்பாக்கம் ஊராட்சி கிளை கழக செயலாளர் மெய்யழகன், ஜான்தினகரன், தமிழ்ச் செல்வன், இன்பசேகரன், கண்ணன், சண்முகம், சாய்ராம், புஷ்பராஜ், வரலட்சுமிமுருகன், ஜே.கே.தினேஷ், சி.ஜெ.கார்த்திக், வாசு, கமலநாதன், செல்வகுமார், சுந்தர்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊரப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் பவானிகார்த்தி வரவேற்று பேசினார்.

சிறப்பு அழைப்பாளர்களாக தலைமை கழக பேச்சாளர் புதுக்கோட்டை விஜயா, செங்கல்பட்டு தொகுதி எம்.எல்.ஏ. வரலட்சுமி மதுசூதனன், நந்திவரம்- கூடுவாஞ்சேரி நகர மன்ற தலைவர் எம்.கே.டி.கார்த்திக்தண்டபாணி, தெற்கு ஒன்றிய செயலாளர் ஆப்பூர் சந்தானம், தலைமை பொதுக்குழு உறுப்பினர் எம்.டி.சண்முகம் ஒன்றிய பெருந்தலைவர் உதயா கருணாகரன், மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் ஜான்தினகரன், ஒன்றிய மாணவர் அணி அமைப்பாளர் கருணாகரன், மகளிர் அணி அமைப்பாளர் விஜயலட்சுமி, தகவல் தொழில் நுட்ப அணி அமைப்பாளர் தீபன் மாணிக்கம் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.

விழாவில் கிளை செயலாளர் சி.ஜே.கார்த்திக் ஏற்பாட்டில் 2500 பெண்களுக்கு புடவை, பிரியாணி, சலவைத் தொழிலாளர்கள் 15 பேருக்கு அயன்பாக்ஸ், மாற்றுத்திறனாளிகளுக்கு மிதிவண்டி, இளைஞர்களுக்கு கேரம் போர்டு, வாலிபால், டென்னிஸ் மற்றும் கிரிக்கெட் கிட் ஆகிய நல திட்ட உதவிகளை வரலட்சுமி மதுசூதனன் எம்.எல்.ஏ. வழங்கினார். இதில் ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், துணை தலைவர்கள், கிளை கழக செயலாளர்கள் உட்பட 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ஏவி.எம். இளங்கோவன் நன்றி கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.