நான் லஞ்சம் வாங்கினேன் என நிரூபிக்க முடியுமா?- அண்ணாமலை பரபரப்பு பேட்டி!!
சென்னை விமான நிலையத்தில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- பிரதமர் மோடி 20 ஆண்டுகளாக சொல்லி வருகிறார். சில உட்கட்சி விசயங்களை பேசுவது பதவிக்கு அழகல்ல. மக்கள் பிரச்சினை குறித்து டெல்லியில் என்ன பேசினாலும் வெளியே பேசுவது என் கடமை. காலமும் நேரமும் வரும் போது பேசுவேன். தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு எப்படி இருக்கிறது என்றால் நடிகர் வடிவேல் நடித்த 23ம் புலிகேசி படம் தான் நினைவுக்கு வருகிறது. முதலமைச்சர் தினமும் சமூக வலைதளத்தில் யார் தவறாக பேசுகின்றனர் என கேட்டு அதிகாலையில் கைது செய்வதில் தான் அரசு முனைப்பு காட்டுகிறது.
பெண்கள், குழந்தைகள் மீது வன்மத்தை காட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. தமிழக முதலமைச்சருக்கு சமூக வளைதளத்தில் வரும் கருத்துகள் முள் போல் குத்துகிறது. இத்தனை ஆண்டுகள் பாரம்பரிய அரசியல் குடும்பத்தில் வந்தவர், இளைஞர்களை கைது செய்து சிறையில் அடைப்பது எந்தளவு பெருத்தன்மையை காட்டுகிறது. தமிழகத்தில் கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகமாக தான் இருக்கிறது. 2021 ஆண்டை விட 2022ம் ஆண்டு முதல் அதிகரித்து விட்டது. அரவக்குறிச்சி தொகுதியில் செலவு செய்தது குறித்து அரசு உளவுத்துறை, 70 ஆயிரம் போலீசார் கர்நாடகவிற்கு அனுப்பட்டும். ஆட்சியே அவர்களிடம் இருக்கும் போது நான் என்ன பதில் சொல்ல வேண்டி உள்ளது.
வருவாய் துறை அதிகாரிகள், ஆட்சியர், உளவுத் துறை உள்பட முழு அரசு அதிகாரிகளை அண்ணாமலை மீது ஏவி விட்டு சொத்து எவ்வளவு, எவ்வளவு சம்பாதித்தான், கர்நாடகவில் 9 ஆண்டுகள் பணியில் இருந்த போது ஒரு பைசா லஞ்சம் வாங்கினானா என்பதை தேடி பிடித்து வந்து சொல்ல சொன்னால் அதற்கு பதிலளிக்க தயாராக இருக்கிறேன். ஆட்சி, அரசு, அதிகாரம் உங்கள் கையில் இருக்கும் போது ஒருவரை கூட்டி வாருங்கள். ஒரு மனிதனை எதிர்க்க இத்தனை பேரா. தமிழக வரலாற்றில் முதன் முறையாக பார்க்கிறேன். இந்த மனிதன் ஏதோ சிஸ்டத்தை கலைக்கிறான் என்று அர்த்தம். நல்லத்தை நோக்கி போகிறேன் என்பதால் தினமும் தாக்குதல் செய்கின்றனர்.
2 போலீஸ் அதிகாரிகளை குழு அமைத்து சார் பதிவாளர் அலுவலகங்களில் அண்ணாமலை, குடும்பத்தினர் பெயரில் பத்திர பதிவு செய்யப்பட்டு உள்ளதா? வருமான எங்கிருந்து வருகிறது. செல்போனை ஒட்டு கேட்கிறீர்கள். கூட்டணி கட்சி தலைவர்கள் விமர்சனம் செய்வதை நல்லதாக பார்க்கிறேன். பா.ஜ.க. வளர்ச்சியை ரசிக்க விரும்பவில்லை என்பதை பார்க்கிறேன். கூட்டணி கட்சியாக யாராக இருந்தாலும் பா.ஜ.க.வை வளர்க்க வேண்டும் என நினைத்தால் முட்டாள்கள். அரசியலை பொறுத்த வரை யாரும் நண்பர்கள் அல்ல. இதை எப்போ புரிந்து கொள்கிறோமோ அப்போது தான் பா.ஜ.க. வளர்ச்சி. அரசியலில் நிரந்தரமான நண்பர்களும் கிடையாது. நிரந்தரமான எதிரிகளும் கிடையாது. தனித்து போட்டியிடுவது என்பது எங்களுக்கும் தமிழக மக்களுக்கும் இடையே உள்ள பிரச்சினை. உங்கள் கடையை திறக்க நான் ஆள் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.