உக்ரைன் போலந்து எல்லைக்கு இளவரசர் வில்லியம் திடீர் விஜயம் – படையினரை சந்தித்தார்!!
பிரிட்டிஸ் இளவரசர் வில்லியம் உக்ரைன் போலந்து எல்லையில் படையினரை சென்று சந்தித்துள்ளார்.
உக்ரைன் போலந்து எல்லையில் பிரிட்டிஸ் படையினர் உள்ள பகுதிக்கு அறிவிக்கப்படாத விஜயமொன்றை மேற்கொண்டுள்ள வில்லியம் உக்ரைன் மற்றும் அந்த நாட்டின் மக்களின் சுதந்திரத்திற்காக வழங்கிவரும் ஆதரவிற்கு பாராட்டுகளை எடுத்துள்ளார்.
உக்ரைன் போலந்து எல்லையில் உள்ள செஜோவ் பாதுகாப்பு தளத்திற்கு சென்ற இளவரசர் வில்லியம் போலந்தின் உக்ரைனின் பாதுகாப்பு அமைச்சரை சந்தித்து உரையாடியுள்ளதுடன் இராணுவ சாதனங்களை பார்வையிட்டுள்ளார்.
பிரிட்டிஸ் போலந்து படையினர் மத்தியிலான நட்புறவு குறித்து வில்லியம் கருத்து வெளியிட்டுள்ளார்.
இதன் பிரிட்டிஸ் படையினரை சந்தித்துள்ள இளவரசர் வில்லியம் அவர்கள் உக்ரைன் தொடர்பில் போலந்து படையினருக்கு எவ்வாறு ஆதரவை வழங்குகின்றனர் என கேட்டறிந்துள்ளார்.
போலந்து தலைநகரில் தரையிறங்கிய பின்னர் போலந்திற்கு மீண்டும் விஜயம் மேற்கொள்வது மிகச்சிறந்த விடயம் என இளவரசர் வில்லியம் தெரிவித்துள்ளார்
எங்கள் நாடுகளிற்கு இடையில் வலுவான உறவுகள் உள்ளன உக்ரைன் மற்றும் அதன் மக்களிற்கான சுதந்திரத்திற்கான ஒத்துழைப்பு மூலம் எங்களின் உறவுகள் மேலும் வலுப்படுத்தப்படுகின்றன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உக்ரைனினதும் மக்களினதும் சுதந்திரம் எங்களினதும் உங்களினதும் சுதந்திரம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மிகநெருக்கமான முக்கியமான ஒத்துழைப்பிற்காக பணியாற்றிவரும் பிரிட்டன் மற்றும்போலந்து படையினருக்கு தனிப்பட்ட ரீதியில் நன்றி தெரிவிக்கவே நான் இங்கு விஜயம் மேற்கொண்டேன் போலந்து மக்களின் புத்துணர்வூட்டும் மனிதாபிமானத்திற்கு பாராட்டுகளை தெரிவிக்க விரும்புகின்றேன் நீங்கள் உங்கள் வீடுகளை போல இதயங்களையும் திறந்துள்ளீர்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.