மகாவலி ஆற்றில் மூழ்கி காணாமல் போன கைதி!!
பல்லேகெல முகாமில் இருந்து கைதி ஒருவர் மகாவலி ஆற்றில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.
கைதி காவலில் இருந்து தப்பி மகாவலி ஆற்றில் குதித்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காணாமல் போனவர் கொழும்பு 15 இல் வசிக்கும் 34 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த கைதி ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்ட பின்னர் புனர்வாழ்வளிக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவரின் சடலத்தை தேடும் பணிகள் பொலிஸார் மற்றும் கடற்படையினரின் உதவியுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.