சைவமக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பான அவசர கலந்துரையாடல்.!!
வடக்கு கிழக்கில் சைவக்கோவில்கள் மற்றும் சைவமக்கள் எதிர்நோக்கும்
பிரச்சனைகள் தொடர்பான அவசர கலந்துரையாடல்.
வடக்கு கிழக்கிலுள்ள சைவசமையம் சார்ந்த அமைப்புக்கள், கோவில் தர்மகர்த்தாசபையினர், ஆதீன கர்த்தாக்கள், கோவில் நிர்வாகத்தினைச் சேர்ந்தவர்களுக்கான அவசர கலந்துரையாடல்
எதிர்வரும் வெள்ளிக்கிழமை(31) பிற்பகல் 4.00 மணிக்கு நல்லை ஆதீனத்தில் ஆதீன
குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் அவர்கள் தலைமையில்
நடைபெறவுள்ளது.
இக்கூட்டத்திற்கு மேற்குறிப்பிட்ட அமைப்புக்களைச் சார்ந்த மூன்று
பிரதிநிதிகளை தவறாது சமூகமளிக்குமாறு கோரப்பட்டுள்ளது.
தற்போது வடக்கு, கிழக்குப் பகுதிகளில் சைவக்கோவில்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் மற்றும் சைவமக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சனைகள் தொடர்பாக ஆராய்ந்து முக்கிய
தீர்மானங்கள் எடுக்கவேண்டியுள்ளதால் மேற்குறிப்பிட்ட அமைப்புக்களைச் சார்ந்தவர்களை
தவறாது சமூகமளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.