பணி நீக்கம் செய்யப்பட்ட எச் 1 பி விசா ஊழியர்கள் 60 நாட்களில் வௌியேற வேண்டும் என்பதில் உண்மையில்லை: அமெரிக்க குடியுரிமை இயக்குநரகம் தகவல்!!
அமெரிக்காவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் அதிகளவில் வௌிநாட்டினர் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் அமெரிக்காவில் பணியாற்ற எச் 1 பி விசா என்ற தற்காலிக விசா மூலம் பணியாற்றி வருகின்றனர். கொரோனாவுக்கு பின் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் சுமார் 2 லட்சம் ஐ.டி பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 40 சதவீதம் பேர் இந்தியர்கள். இந்நிலையில், தற்காலிக எச் 1 பி விசா வைத்துள்ள, பணி நீக்கம் செய்யப்பட்ட பணியாளர்கள் 60 நாட்களுக்குள் புதிய வேலையை தேடி கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் அமெரிக்காவை விட்டு வௌியேற வேண்டும் என்று தகவல்கள் வௌியாகின.
ஆனால், பணி நீக்கம் செய்யப்பட்ட எச் 1 பி விசா வைத்துள்ளவர்கள் 60 நாட்களுக்குள் அமெரிக்காவை விட்டு வௌியேற வேண்டும் என்ற கூற்றில் உண்மையில்லை என அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
* 2024ம் ஆண்டுக்கான எச் 1 பி விசா பதிவு முடிந்தது 2024ம் ஆண்டில் 65 ஆயிரம் எச் 1 பி விசா வழங்க வரம்பு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. போதுமான இணையபதிவுகள் பெறப்பட்டுள்ளதால் பதிவு முடிவடைந்தது” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.