;
Athirady Tamil News

மின்மயமாக்கும் பணி முடிவடைந்ததையொட்டி நெல்லை-திருச்செந்தூர் இடையே மின்சார ரெயில் இயக்கம்!!

0

நெல்லை, திருச்செந்தூர் ரெயில் பாதை மின்மயமாக்கும் பணிகள் கடந்த 3 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. தற்போது அனைத்து பணிகளும் நிறைவடைந்து உள்ளது. கடந்த 2 வாரத்திற்கு முன்பு நெல்லை-திருச்செந்தூர் இடையே அதிவேக ரெயில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். இதனைத்தொடர்ந்து மின்சார ரெயில் என்ஜின் மூலம் நெல்லை-திருச்செந்தூர் மார்க்கத்தில் அனைத்து ரெயில்களும் இயக்கப்படுவதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டு செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

இந்நிலையில் நெல்லை-திருச்செந்தூர் மார்க்கத்தில் மின்சார ரெயில் சேவை இன்று தொடங்கியது. இதில் ஏராளமான பயணிகள் பயணம் செய்தனர். ரெயில்களில் மின்சார என்ஜின் பொருத்தப்பட்டுள்ள நிலையில் ரெயில்களின் வேகமும் அதிகரிக்க செய்யப்பட்டுள்ளது. இதனால் நெல்லை-திருச்செந்தூர் மற்றும் திருச்செந்தூர்-சென்னை ரெயில்களின் நேரமும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ரெயில்கள் இயக்கப்படும் புதிய நேரம் நாளை மறுநாள் (31-ந்தேதி) அறிவிக்கப்பட உள்ளது. மின்சார ரெயில் இயக்கப் படுவதால் திருச்செந்தூர்-நெல்லை ரெயில் மார்க்கத்தில் இயக்கப்படும் ரெயில்களின் பயண நேரமும் வெகுவாக குறையும். திருச்செந்தூர்-நெல்லை வழியாக சென்னை செல்லும் திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயிலின் நேரத்திலும் ஒரு மணி நேரம் 10 நிமிடங்கள் பயண நேரம் குறையும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.