மூத்த காங்கிரஸ் தலைவர் ஏ.கே.அந்தோனி மகன் பாஜகவில் இணைந்தார்!!
மூத்த காங்கிரஸ் தலைவர்களில் ஒருவர் ஏ.கே.அந்தோனி. இவர் முன்னாள் ராணுவ மந்திரியாக பதவி வகித்தவர். சமீபத்தில் பிரதமர் மோடி குறித்த ஆவணப்படத்தை பி.பி.சி. சேனல் தயாரித்துள்ளது. இந்த ஆவணப்படத்தை இந்தியாவில் வெளியிட மத்திய அரசு தடை விதித்துள்ளது. இதற்கிடையே, பிரதமர் நரேந்திர மோடி குறித்து பி.பி.சி. சார்பில் வெளியிடப்பட்ட ஆவணப்படத்துக்கு ஏ.கே.அந்தோனியின் மகன் அனில் அந்தோணி கண்டனம் தெரிவித்திருந்தார்.
மேலும், காங்கிரஸ் கட்சியின் பல்வேறு பொறுப்புகளில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இந்நிலையில், தலைநகர் டெல்லியில் மத்திய மந்திரிகள் பியூஷ் கோயல் மற்றும் வி.முரளீதரன் முன்னிலையில் அனில் அந்தோனி இன்று பா.ஜ.க.வில் இணைந்தார்.