வெளிநாடு வாழ் இலங்கையர், ஏற்றுமதியார்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!!
வெளிநாடுகளில் உள்ள இலங்கை பிரஜைகள் மற்றும் ஏற்றுமதி வருமானம் உள்ளவர்கள் டொலர்களை இலங்கை ரூபாவாக மாற்ற வேண்டிய கட்டாயம் நீக்கப்பட்டுள்ளது.
அந்த தரப்பினர் ஒரு குறிப்பிட்ட தொகை டொலர்களை இலங்கை ரூபாவாக மாற்ற வேண்டும் என விதிக்கப்பட்டிருந்த கட்டாய விதி இடைநிறுத்தப்பட்டுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க டெய்லிநியூஸ்கு தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளிலிருந்து பணம் அனுப்புதல், ஏற்றுமதி வருமானம் மற்றும் சுற்றுலாத் துறையின் வருமானம் ஆகியவற்றின் மூலம் பெறப்படும் அமெரிக்க டொலர்களின் அளவு அதிகரித்து வருவதனை கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
பொருளாதாரத்தின் தற்போதைய நிலையைக் கருத்தில் கொண்டு ஏற்றுமதி வருமானத்தின் ஒரு பகுதியை இலங்கை ரூபாவாக மாற்ற வேண்டிய அவசியமில்லை என்றும் அவர் இதன்போது கூறியுள்ளார்.