;
Athirady Tamil News

யாழ் இந்தியத் துணைத் தூதரகம் இணைந்து நடாத்தும் வடமாகாண தொழிற்துறை வர்த்தக சந்தை – 2023!! (PHOTOS)

0

சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு வடக்கு மாகாண தொழிற்துறை திணைக்களம் மற்றும் யாழ் இந்தியத் துணைத் தூதரகம் இணைந்து நடாத்தும் வடமாகாண தொழிற்துறை வர்த்தக சந்தை – 2023 ஆரம்பமானது.

யாழ்ப்பாணம் கலாசார மத்திய நிலைய வளாகத்தில் ஆரம்பிக்கப்பட்ட குறித்த வர்த்தக சந்தை, இன்று(10) நாளை(11) நாளை மறுநாள்(12) என மூன்று தினங்கள் காலை 9மணி முதல் இரவு 9மணி வரை இடம்பெறவுள்ளது.

வடக்கு மாகாண தொழிற்துறை திணைக்களப் பணிப்பாளர் வனஜா செல்வரட்ணம் தலைமையில் நடைபெற்ற ஆரம்ப நிகழ்வில் வடமாகாண பிரதம செயலாளர் சமன் பந்துலசேன, யாழ் இந்தியத் துணைத் தூதரக தலைமை நிர்வாக அதிகாரி ராம் மகேஷ் ,வடமாகாண மகளிர் அமைச்சின் செயலாளர் ரூபினி வரதலிங்கம்,யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் அ.சிவபாலசுந்தரன், சர்வதேச தொழிலாளர் அமைப்பின் தேசிய நிகழ்ச்சித் திட்ட இணைப்பாளர் நிஹால் தேவகிரி, ஹற்றன் நஷனல் வங்கியின் வடமாகாண பிராந்திய வர்த்தக தலைமை அதிகாரி நிஷாந்தன் கருணைராஜ் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

இதன்போது, வடக்கு மாகாணத்தில் சுய தொழில் முயற்சியாளர்களாகவும், உற்பத்தியாளர்களாகவும் உள்ளவர்களின் உற்பத்திகளின் கண்காட்சியும், விற்பனை சந்தையும் இடம்பெற்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.