;
Athirady Tamil News

மிகப்பெரிய தற்காப்பு கோட்டை உருவாக்கும் ரஷ்ய துருப்புக்கள்!

0

புடின் கூலிக்கு அமர்த்தியுள்ள பணியாளர்கள், ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்ட உக்ரைன் பகுதிகளைச் சுற்றி, முதல் உலகப்போரில் நடந்தது போல அகழிகள் தோண்டி வருகிறார்கள்.

உக்ரைனால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள Zaporizhzhia பகுதியில் புடினால் பணிக்கமர்த்தபட்டுள்ள Kyrgyzstan நாட்டவர்களான பணியாளர்கள், முதல் உலகப்போர்க்காலத்தில் செய்யப்பட்டது போல அகழிகள் தோண்டிவருவதைக் காட்டும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

அதேபோல, செயற்கைக்கோள் புகைப்படங்கள், Zaporizhzhia பகுதியில், சுமார் 45 மைல் தொலைவுக்கு பள்ளம் தோண்டப்பட்டுள்ளதைக் காட்டுகின்றன.

ரஷ்யா ஆக்கிரமித்துக்கொண்ட உக்ரைன் பகுதிகளை மீண்டும் உக்ரைன் வீரர்கள் கைப்பற்றிவிடுவார்களோ என்ற அச்சம் புடினுக்கு உருவாகியுள்ளது.

ஆக்கிரமித்த பகுதிகளை இழந்துவிடுவோமோ என்ற அச்சத்தில், புடின் இவ்வாறு அகழிகள் தோண்டி வருகிறார்.

இந்நிலையில், உக்ரைன் தரப்பு புடினுடைய செயலை கேலி செய்துள்ளது.

தற்கிடையில், அகழி தோண்டுவதற்காக புடினால் பணிக்கமர்த்தபட்டுள்ள Kyrgyzstan நாட்டவர்களான பணியாளர்கள் சிலர், தங்கள் வேலைக்கு சரியான ஊதியம் வழங்கப்படவில்லை என குற்றம் சுமத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.