டி.வி. ரிமோட்டை விட குள்ளமான நாய்- கின்னஸ் சாதனை படைத்தது!!
உலகின் மிகவும் குள்ளமான நாய் என்ற கின்னஸ் சாதனையை ‘பேர்ல்’ (தமிழிலில் முத்து) என்ற 2-வது நாய் படைத்து உள்ளது. சிவாஹூவா என்ற இனத்தை சேர்ந்த இந்த பெண் நாய் கடந்த 2020-ம் ஆண்டு செப்டம்பர் 1-ந்தேதி பிறந்துள்ளது. 9.14 சென்டி மீட்டர் உயரமும், 12.7 சென்டி மீட்டர் நீளமும் கொண்ட இந்த நாய் டி.வி. ரிமோட்டை விட சிறியதாக உள்ளது. இந்த நாய் டாலர் நோட்டின் நீளம் தான் இருக்கிறது.
உலகின் மிக குட்டையான நாயான பேர்லுக் வணக்கம் சொல்லுங்கள் என்று ஜிடபிள்யுஆர் என்பவர் கடந்த 10-ந்தேதி டுவிட்டரில் பேர்ல் நாயின் புகைப்படத்தை பதிவிட்டார். அப்போது முதலே இந்த நாய் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. உலக கின்னஸ் ரெக்கார்ட் வெளியிட்ட தகவலின் படி இதற்கு முன்பு உலகின் மிகச்சிறிய நாயாக அங்கீகரிக்கப்பட்ட மிராக்கிள் மில்லியின் வம்சாவளியில் வந்த பெண் நாய்தான் பேர்ல்.
இதற்கு முன்பு இந்த பட்டம் மிராக்கிள் மில்லியிடம் இருந்தது. இந்த நிலையில் தான் பேர்ல் உலகின் குள்ளமான நாய் என்ற சாதனையை படைத்துள்ளது. இதனை உலக கின்னஸ் ரெக்கார்ட் அமைப்பும் அங்கீகரித்து உள்ளது. பேர்ல் நாயை சமீபத்தில் அதன் உரிமையாளர் வனேசா சென்டரால் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் அறிமுகப்படுத்தினார். அதை பார்த்ததுமே பார்வையாளர்கள் மிகப்பெரிய அளவில் கைதட்டி உற்சாகப்படுத்தினர்.