பாகிஸ்தானுக்கு ரூ.8 ஆயிரம் கோடி வழங்கும் யுஏஇ!!
பாகிஸ்தானுக்கு ரூ.8 ஆயிரம் கோடி நிதி உதவி வழங்குவதாக ஐக்கிய அரபு எமிரேட் அறிவித்து உள்ளது. பாகிஸ்தான் கடுமையான நிதிபற்றாக்குறையில் சிக்கித்தவிக்கிறது. அங்கு உணவு பொருட்கள் விலை தாறுமாறாக உயர்ந்து விட்டது. கடன் வழங்க உலக வங்கி பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது. இதனால் ஐக்கிய அரபு எமிரேட்டிடம் பாகிஸ்தான் உதவி கேட்டு கைஏந்தியது.
இதையடுத்து ரூ.8 ஆயிரம் கோடி நிதி உதவியை ஐக்கிய அரபு எமிரேட் வழங்கி உள்ளது. இதை பாகிஸ்தான் நிதி அமைச்சர் இஷக் தார் உறுதிப்படுத்தினார். ஏற்கனவே உலக வங்கி கட்டுப்பாடுகளை நிறைவேற்ற கடந்த ஜனவரி மாதம் ஐக்கிய அரபு எமிரேட் ரூ.16 ஆயிரம் கோடி பாகிஸ்தானுக்கு கடன் வழங்கியிருந்தது. இப்போது மீண்டும் உதவிக்கரம் நீட்டி உள்ளது.