பாரிய அளவிலான போதைப் பொருட்களுடன் 6 பேர் கைது!!
இலங்கைக்கு தெற்கே சர்வதேச கடற்பரப்பில் பாரிய அளவிலான போதைப் பொருட்களுடன் 6 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்
இலங்கை கடற்படை, பொலிஸ் மற்றும் புலனாய்வு அமைப்புகளின் கூட்டு நடவடிக்கையின் போது குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது சந்தேகநபர்கள் பயன்படுத்திய பல நாள் மீன்பிடிக் கப்பலும் கைப்பற்றப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.