;
Athirady Tamil News

பூமிக்கு வருகிறது விண்வெளியில் விளைவிக்கப்பட்ட தக்காளி: நாசா அறிவிப்பு!!

0

விண்வெளியில் விளைவிக்கப்பட்ட தக்காளி பிரத்யேக விண்கலம் மூலம் பூமிக்கு கொண்டுவரப்படுவதாக அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு அமைப்பான நாசா தெரிவித்துள்ளது. இது இன்று பூமியை அடையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக நாடுகள் விண்வெளியில் தங்கள் ஆதிக்கத்தை செலுத்தும் நோக்கில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றன. பிற கிரகங்களில் மனிதர்கள் வாழும் சாத்தியக்கூறுகள் தொடங்கி அந்த கோள்களில் நீர் உள்ளதா என்பது வரையில் பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக செவ்வாய் கிரகத்தில் மனிதர்களை குடியேற்றும் ஆராய்ச்சிகளும் நடைபெற்று வருகிறது.

இந்த சூழலில் விண்வெளியில் விளைவிக்கப்பட்ட தக்காளி பூமிக்கு கொண்டு வரப்படுகிறது. கடந்த ஆண்டு நிலவில் சேகரிக்கப்பட்ட மண் மாதிரியை கொண்டு செடியை வளர்த்து அசத்தி இருந்தனர் விஞ்ஞானிகள். நாசா மற்றும் புளோரிடா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் இணைந்து இந்த ஆய்வை மேற்கொண்டனர். இந்த நிலையில் தற்போது விண்வெளியில் தக்காளி விளைவிக்கப்பட்டுள்ளது. உலக மக்கள் பெரும்பாலானோர் தக்காளியை தங்கள் உணவில் சேர்த்து கொள்கிறார்கள். சமைக்காமல் பச்சையாகவும், சமைத்தும், சாஸ் (Sauce) என பல வகையில் நம் உணவில் தக்காளி இடம்பெற்றுள்ளது.

விண்வெளியில் ஆராய்ச்சி ரீதியாக தக்காளி விளைவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச விண்வெளி நிலையத்தில் அமைக்கப்பட்ட மினியேச்சர் கிரீன்ஹவுஸ் ஆய்வுக் கூடம் ஒன்றில் விஞ்ஞானிகள் தக்காளியை விடுவித்துள்ளனர். இது குட்டை ரக தக்காளி என நாசா தெரிவித்துள்ளது. சுமார் 100 நாட்களுக்கு மேல் தக்காளி அங்கு பயிர் செய்யப்பட்டுள்ளது. முறையே 90, 97 மற்றும் 104-வது நாட்களில் தக்காளி அறுவடை செய்யப்படுள்ளது. அதை பதப்படுத்தி அதன் ஊட்டச்சத்து சார்ந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது எதிர்வரும் காலத்தில் நீண்ட கால விண்வெளி பயணத்தின் போது ப்ரெஷ் உணவு பெற உதவும் முக்கியத்துவம் வாய்ந்த ஆய்வு என நாசா தெரிவித்துள்ளது.

ஜப்பான் விண்வெளி ஆய்வு முகமை சார்பில் விண்வெளியில் தயாரித்த கிரிசடல்களும் அடங்கும் என தெரிகிறது. இந்த விண்கலம் பூமியை அடைந்ததும் புளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்திற்கு கொண்டு வரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.