மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 948 கனஅடியாக சரிவு!!
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து ஒகேனக்கல், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரிப்பதும், சரிவதுமாக உள்ளது. ஒகேனக்கல் காவிரியில் நேற்று 1,000 கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலையும் அதே அளவில் நீடித்தது. அதே சமயம், மேட்டூர் அணைக்கு நேற்று காலை 1,109 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை 948 கன அடியாக சரிந்துள்ளது.
அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1,500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. நீர்வரத்தை விட அணையின் திறப்பு அதிகமாக இருப்பதால், அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. இன்று அணையின் நீர்மட்டம் 102.45 அடியாக உள்ளது.