புதிய மின்சார சட்டத்தின் இறுதி வரைவு ’மே’ யில் !!
புதிய மின்சார சட்டத்தின் இறுதி வரைவு மே மாதம் இறுதியில் அங்கீகாரத்திற்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என மின்சாரம் மற்றும் சக்தி அமைச்சர் காஞ்சன விஜயசேகர இன்று தெரிவித்தார்.
இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பு செயல்முறையின் திட்ட வரைபடம் மற்றும் நேர அட்டவணைக்கு நேற்று அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளதாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
சீர்திருத்த செயலகத்தை நிறுவுவதற்கும், ADB, உலக வங்கி, USAID மற்றும் JICA போன்ற மேம்பாட்டு முகாமைகளின் உதவியைப் பெறுவதற்கும், நிதி மற்றும் மனிதவளத் தணிக்கையை நடத்துவதற்கும், அக்டோபர் 2023க்குள் செயல்முறையை நிறைவு செய்வதற்கும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளத என அவர் தெரிவித்துள்ளார்.