கோட்டாகோகம போராட்டத்தின் முக்கிய செயற்பாட்டாளர் தற்கொலை!!
அரசுககு எதிராக காலிமுகத்திடலில் வெகுஜன போராட்டத்தை ஆரம்பித்ததில் முக்கிய பங்காற்றியவரான கோட்டாகோகமவை நிறுவியவர்களில் ஒருவரான புத்தி பிரபோத கருணாரத்ன தற்கொலை செய்து கொண்டார்.
அவருக்கு சமூக ஊடகங்களில் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த சர்ச்சைக்குரிய பதிவொன்றை இட்டுள்ளார். காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் மீது குண்டர் கும்பலை ஏவி தாக்கிய விவகாரத்தில் சனத் நிஷாந்த கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
சனத் நிஷாந்தவின் பதிவில், கோட்டாகோகம கிராமத்தில் முதல் சிறிய குடிசையை கட்டியவர் போராட்டத்தின் முன்னணி தலைவர்களில் ஒருவரான புத்தி பிரபோத.
புத்தி பிரபோத கருணாரத்னவும் மே 9 தாக்குதலின் போது நாட்டைப் பற்றவைப்பதில் முக்கிய பங்கு வகித்தார்.
புத்தி பிரபோத கடந்த காலமாக மஹிந்தவின் உடல்நிலைக்காக பிரார்த்தனை செய்தவர். மஹிந்த இறக்கும் வரை காத்திருந்தார். எனினும், அவர் நீண்டகாலமாக மன உளைச்சலில் இருந்து வந்தார்.
அவர் மன உளைச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்தது தற்போது தெரியவந்துள்ளது. திரும்பிப் பார்க்கும்போது, காலிமுகத்திடல போராட்டம் மனநோயால் பாதிக்கப்பட்ட பலரால் வழிநடத்தப்பட்டது.
ஆனால், போராட்டம் தொடங்கி ஓராண்டு முடிவதற்குள் அவர் தற்கொலை செய்து கொண்டார்.
முதல் போராளியான புத்தி பிரபோத கருணாரத்னவுக்கு நிம்மதி! ” என குறிப்பிட்டுள்ளார்.