குடி நீருக்கு திண்டாடும் உலக வல்லரசு நாடு அமெரிக்கா…!
உலகில் உள்ள வல்லரசு நாடுகள் தமக்கு தேவையான வளங்கள் பலவற்றை கொண்டிருந்தாலும், மிக முக்கியமான அத்தியாவசிய தேவைகளுக்கு அங்கும் பற்றாக்குறை நிலவிக்கொண்டுதான் இருக்கிறது.
பெரும்பாலான உலக மக்கள் சுத்தமான குடி நீரை பெற்றுக்கொள்வதில் பல சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.
அந்தவகையில், உலகில் உள்ள செல்வந்த மற்றும் வல்லரசு நாடான அமெரிக்காவிலும் சுத்தமான குடிநீருக்கு பாரிய தட்டுப்பாடு நீடிக்கிறது.
அமெரிக்காவில் மில்லியன் கணக்கான மக்களுக்குப் போதுமான அளவு பாதுகாப்பான குடிநீர் கிடைக்கவில்லை என அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.
அங்கு கிட்டத்தட்ட 2 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் அன்றாடப் பயன்பாட்டுக்குரிய தண்ணீர் கிடைக்காமல் திண்டாடுகின்றனர்.
குறிப்பாக, அமெரிக்காவின் தென்மேற்கு வட்டாரம் முழுதிலும் கடுமையான வறட்சி நீடிப்பதுடன், எளிதில் பாதிக்கப்படக்கூடிய நிலையில் இருக்கின்றவர்கள் மேலும் கடும் சிரமங்களை எதிர்நோக்கக்கூடும் என கூறப்படுகிறது.