;
Athirady Tamil News

மாலி நாட்டில் தற்கொலை தாக்குதலில் 9 பேர் பலி !!

0

மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் அரசுக்கு எதிராக கிளர்ச்சி குழுக்கள் சண்டையிட்டு வருகின்றன. இந்த நிலையில் அந்நாட்டின் செவரே பகுதியில் மூன்று தற்கொலை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 9 பேர் பலியானார்கள். சுமார் 60-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். தாக்குதலில் 20 கட்டிடங்கள் சேதம் அடைந்தன. இதற்கிடையே வெடி பொருட்கள் நிரப்பப்பட்ட 3 வாகனங்கள் ராணுவ டிரோன் துப்பாக்கி சூட்டில் அழிக்கப்பட்டதாக அரசு தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.